இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(21) காலை சிங்கப்பூருக்கு பயணமானார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாக்கூப்(Halimah Yacob) இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி R.H.S.சமரதுங்க ஆகியோரும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.