காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலையை அண்மித்து பரவிவரும் அடையாளம் காணப்படாத நோயொன்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைதிகள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பரவிவரும் நோய் நிலைமையை அடையாளம் கண்டறிவதற்காக, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்று தற்போது பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைதிகள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.