Header image alt text

யாழ். ஆறுகால்மடம், புதுவீதியைச் சேர்ந்தவரும், பிரான்ஸ், பாரீஸை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளையின் அமைப்பாளர் தோழர் பவானந்த் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி நல்லதம்பி அம்பிகாபதி அவர்கள் நேற்று (22.08..2023) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

Read more

சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழு நேற்றிரவு(22) நாடு திரும்பியது. சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், நேற்றிரவு 11.27 அளவில் குறித்த குழு நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். Read more

 சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகளுடன் கூடிய சில வாகனங்கள் இராணுவ தலைமையகத்தில் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டன. பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் வாகனங்களை பெற்றுக்கொண்டனர். Read more