புளொட் பிரித்தானியக் கிளையின் – 2023 வீரமக்கள் தின நினைவாக பிரித்தானிய தோழர்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் வசிக்கும் தோழர் குகன் (கனகசபை கந்தவனம்) அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 203,000/- ரூபா நிதி உதவி கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று (24.08.2023) வியாழக்கிழமை கட்சியின் வவுனியா அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
உதவி வழங்கும் நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ராகவன், கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் தயாபரன், பிரித்தானியக் கிளையின் நிர்வாகச் செயலாளர் சுகந்தன், கதிர்காமநாதன், தேசிய அமைப்பாளர் பீற்றர், நிர்வாகச் செயலாளர் பற்றிக், மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
மேலும் வவுனியாவில் வசிக்கும் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரது மருத்துவச் செலவுக்காக ரூபாய் 18,000/- நிதியுதவியும் இன்று கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.