Posted by plotenewseditor on 26 August 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 26 August 2023
Posted in செய்திகள்
கடல் நீரை சுத்திகரித்து நாளாந்த பயன்பாட்டிற்கான நீரை பெற்றுக்கொள்ளும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் மூலம் 60,000 குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 இலட்சம் பேருக்கு நீர் வழங்க முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருட முற்பகுதியில் பணிகளை நிறைவு செய்ய முடியும் எனவும் சபை தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 August 2023
Posted in செய்திகள்
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான கொலை வழக்கில் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா நீதவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யும் அளவிற்கு போதிய விடயங்கள் இல்லை என சட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடிப்படையாகக் கொண்டு நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more