முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான கொலை வழக்கில் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா நீதவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யும் அளவிற்கு போதிய விடயங்கள் இல்லை என சட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடிப்படையாகக் கொண்டு நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பரிசோதகர்களான சுகத் மென்டிஸ், நிஷாந்த மென்டிஸ், R.பிரேமதிலக்க ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.