Header image alt text

(தேசியத்தின பால் ஈர்ந்தவர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை)
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இதுவரை இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கம் எதுவும் கூறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

Read more

காலி சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  கைதிகளிடையே காய்ச்சல் மற்றும் தோல் தொடர்பான தொற்று பரவியமையினால் கடந்த நாட்களில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும், கைதிகளை வௌியில் அழைத்துச் செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் தவிர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று(28) கொழும்பு கோட்டையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more