இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 02.09.2023 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து காலை 10.30 அளவில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்படவுள்ளது.
11.30மணியளவில் வலிதெற்கு பிரதேசசபை முன்றலில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்படவுள்ளது.
மேலும் மாலை 4.00 மணியளவில் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூரப்படவுள்ளது.