அதிகரித்திருக்கும் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் – உரும்பிராய், செல்வபுரம் பகுதி மக்கள் இன்று (01) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செல்வபுரம் பிரதேச மக்களால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி, பலாலி வீதியை சென்றடைந்து, வேம்படி வீதியூடாக மீண்டும் செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. Read more