Header image alt text

திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு விதிக்குமாறு நிலாவெளி காவல்துறையினர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர். அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி தடை விதித்துள்ளது. Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2023) முற்பகல் 11.30 மணியளவில் வலிதெற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சிரேஸ்ட உபதலைவர் ராகவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், கட்சியின் முன்னாள் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள், ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

தோழர்கள் மாணிக்கதாசன், இளங்கோ, வினோ ஆகியோரின் நினைவாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் இன்று வரோட் அமைப்பிலுள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டது. Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2023) முற்பகல் யாழ் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், தோழர் தீபன்(சுவிஸ்), வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் க.தர்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கம் ராஜன் (மாணிக்கதாசன்) மற்றும் மறைந்த தோழர்கள் தர்மலிங்கம் தேவராஜா(இளங்கோ), முருகேசு குணரட்ணம்(வினோ) ஆகியோரின் 24ஆவது நினைவு தினத்தையிட்டு வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்திற்கு முன்பாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் இன்று (02.09.2023) தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது.

Read more

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7 மணியளவில் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சி.கணேசவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

Read more

02.09.1999 – 02.09.2023
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் (நாகலிங்கம் மாணிக்கம் ராஜன் – யாழ்ப்பாணம்) மற்றும் தோழர்கள் இளங்கோ (தர்மலிங்கம்,தேவராஜா-புளியங்குளம்), வினோ (முருகேசு குணரத்தினம்- மட்டக்களப்பு) ஆகியோரின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
02.09.1985 – 02.09.2023
தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும், மானிப்பாய் தொகுதியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிDPLF) ஆகியவற்றின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…