முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7 மணியளவில் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சி.கணேசவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
ஈழத்தமிழரின் சமகால அரசியல் எனும் தலைப்பில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாண பல்கலைக் கழக அரசறிவியல்த் துறைப் பேராசிரியர்
கே.ரி.கணேசலிங்கம் ஆற்றினார்.
நினைவஞ்சலியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சிரேஸ்ட உபதலைவர் ராகவன், கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் துணைத்தலைவர் பொ.செல்லத்துரை, கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜூட்சன், தொழிற்சங்க பொறுப்பாளர் காண்டீபன், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சு, ஜெகதீஸ்வரன்(சிவம்), முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் தர்சன், நிரோசன், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.