திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு விதிக்குமாறு நிலாவெளி காவல்துறையினர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர். அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி தடை விதித்துள்ளது.
இதன் அடிப்படையில், தடை விதிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.