Header image alt text

மலர்வு 1940.02.14
உதிர்வு 2023.09.07
மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவரும், தோழர்கள் ஆஷா (குணரத்தினம்), சுரேஸ் (கனகலிங்கம்) ஆகியோரின் அன்புத் தாயாருமான திருமதி கதிர்காமத்தம்பி அருளம்மா அவர்கள் நேற்று (07.09..2023) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

Read more

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் டானியல் வூட் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் செய்துள்ளார். அவர் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை பார்வையிட்யிட்டுள்ளார். இதன்போது, நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் நூல்கள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

வெற்றிடங்களை நிரப்புவதற்காக 4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். Read more