வெற்றிடங்களை நிரப்புவதற்காக 4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தற்போது e-GN (e Grama Niladhari Project) வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த குறிப்பிட்டார்.