திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகையொன்றும் பௌத்த கொடிகளும் நடப்பட்டுள்ளமைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதிக்கு இன்று காலை பிரவேசித்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினரால் இந்த பெயர் பலகை நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகாரை நிர்மாண செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் என அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Read more