Posted by plotenewseditor on 10 September 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 10 September 2023
Posted in செய்திகள்
பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது. இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே இந்த தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் கூறுகின்றது. Read more
Posted by plotenewseditor on 10 September 2023
Posted in செய்திகள்
போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் தகவல் நிலையமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 1958 என்ற இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது போக்குவரத்து சிக்கல்களை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் பதில் வர்த்தக முகாமையாளர் எரந்த தில்ஹான் தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.