போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் தகவல் நிலையமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 1958 என்ற இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது போக்குவரத்து சிக்கல்களை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் பதில் வர்த்தக முகாமையாளர் எரந்த தில்ஹான் தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.