Header image alt text

அமரர்கள் மாணிக்கதாசன் இளங்கோ, வினோ ஆகியோரின் 24வது ஆண்டு நினைவாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் 10.09.2023 நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 10ற்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றியதில் இறுதிப்போட்டிக்கு Superstar vs Firezone ஆகிய இரு அணிகள் தகுதிபெற்றிருந்தன.
1ம் இடம் – Superstar S.c (15000 /?)
2ம் இடம் -Firezone S.c (10,000 / ?)
Best spiker – Kageesan (FireZone )Best Setter – Sanjee ( Superstar )

Read more

=ffffffffffffffffffffffffffffffffff
தோழர் பிறேம் (மதியழகன் – பிரித்தானியா) அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி மரிஸ்தா றோஸ் ஜெயந்தி மதியழகன் அவர்கள் பிரித்தானியாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

Read more

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 4.65 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்பரப்பில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எந்தவொரு தாக்கமோ, சுனாமி அபாயமோ ஏற்படவில்லை என பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார். Read more

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர். இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு அதிகாரிகளை தௌிவுபடுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

11.09.1987 இல் வவுனியாவில் மரணித்த தோழர் நவநீதன் ( இராஜலிங்கம் -அனந்தர்புளியங்குளம்) அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….