Header image alt text

வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 34வது வவுனியா பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) அவர்களின் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி இடம்பெற்று தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் வழங்கப்படவுள்ளது. அமரர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் கழகத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், முதல் படைத்தளபதியும், புதிய பாதை ஆசிரியருமாவார்.

Read more

இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். Locomotive operator பொறியியலாளர் சங்கத்தினர்  முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பிற்கு பதில் வழங்கும் வகையில்  அமைச்சர் இதனை கூறியுள்ளார். இன்று காலை முதல் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஸ்கரிப்பு  காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் சேவையில் ஈடுபட்டமையினால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, இன்று காலை ஹொரபே ரயில் நிலையத்தில் அலுவலக ரயிலின் மேற்கூரையில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more

நாடளாவிய ரீதியில் இன்று(12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. Read more