Header image alt text

சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு கோரி திருகோணமலை மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருகோணமலை – சிறிமாபுரவிலிருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள் திருகோணமலை நகரம் ஊடாக மீன்பிடி மற்றும் நீரியல்வள திணைக்களம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணித்தியாலங்கள் கண்டி – திருகோணமலை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கழகத்தின் கிழக்கு மாகாண நடவடிக்கை பொறுப்பாளர் தோழர் சுபாஸ் ( பவானந்தன் – சந்திவெளி) மற்றும் தோழர்கள் ஆனந்தன் ( மணிவண்ணன்- மூளாய் ), ஈழமைந்தன் (ஹரிகரன் – பழுகாமம்),

Read more

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை(14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் இன்று(13) அதிகாலை பயணமாகியுள்ளார். ”G77 குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கியூபாவிற்கு பயணிக்கின்றார். இதேவேளை, அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.