சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900 ஆகக் காணப்பட்டது. Read more