பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில் சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.