மலர்வு: 1940.02.08 உதிர்வு: 2023.09.18
செட்டிகுளம் கரம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், இல: 27ஃ1, நாவலர்வீதி, பண்டாரிகுளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் செல்வம் (செல்லையா செல்வராசா) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி. செல்லையா பார்வதி அவர்கள் நேற்று (18.09.2023) திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினைப் பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
குறிப்பு: அவரது உடல் அஞ்சலிக்காக பண்டாரிகுளம் இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதோடு, இறுதி ஊர்வலம் நாளை (20.09.2023) முற்பகல் 10.30மணிக்கு இடம்பெறவுள்ளது.