Header image alt text

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று 21/09/2023 நடைபெற்ற சிறுவர்களுக்கான சந்தை நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

21.09.2021 இல் மரணித்த தோழர் குரு (ஆறுமுகம் பொன்னுத்துரை) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுகள்…

மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் அமரர் கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அமரர் ராஜினி திராணகம (ராஜினி ராஜசிங்கம் திராணகம) அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட உடற் கூறியல் விரிவுரையாளராகவும், அப்பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதுடன், உடற் கூறியல் துறையில் இங்கிலாந்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர்.

Read more

உலக சமாதான தினத்தையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உண்மை கண்டறியப்படல் வேண்டும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனும் விடயங்களை முன் நிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போராட்டங்கள் இன்று இடம்பெற்றன. Read more

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை, காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் E.V.வேலு, நாகப்பட்டினத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை நேற்று(20) நேரில் சென்று பார்வையிட்டார். Read more

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு(21) உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இரவு 9.30 அளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.