மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் அமரர் கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அமரர் ராஜினி திராணகம (ராஜினி ராஜசிங்கம் திராணகம) அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட உடற் கூறியல் விரிவுரையாளராகவும், அப்பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதுடன், உடற் கூறியல் துறையில் இங்கிலாந்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர்.

90களில் வெளியிடப்பட்ட முறிந்த பனை என்கின்ற ஆங்கில நூலை எழுதியவர்களுள் ஒருவரான இவர், மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை ஆரம்பித்தவர்களிலும் ஒருவராவார்.
80களில் புலிகளுடன் செயற்பட்டு பின்பு ஆயுதப் போராட்ட செயற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் கண்டு அதிலிருந்து விலகி, மனித உரிமைகள் மற்றும் பெண் விடுதலை தொடர்பிலான செயற்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். (மலர்வு 23.02.1954 உதிர்வு 21.09.1989)