ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு(21) உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இரவு 9.30 அளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.