கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டி ஏற்படும் எனவும் அதனை உத்தியோகபூர்வமாக ஆணையாளர் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் கூறினார். Read more