Header image alt text

கிழக்கு மாகாணத்தில், மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் இன்று கையெழுத்திட்டுள்ளார். அண்மையில், கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை உறவினர்களிடம் கையளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டது. இந்த வழக்கு புதுக்கடை இரண்டாம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்குள் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர். பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. Read more