Header image alt text

27.09.1987இல் கல்நாட்டினகுளத்தில் மரணித்த தோழர்கள் காஸ்ட்ரோ ( முல்லைத்தீவு), நந்தீஸ் ( முல்லைத்தீவு), கம்பன் (திருநகர்) ஜெயராஜ் உள்ளிட்ட ஏழு தோழர்களினதும் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

திருகோணமலை, பாலையூற்று முருகன் கோவிலடி கிராம பெண்களுக்கு சக்தி மாதர் சங்கத்தினால் இலவச தையல் பயிற்சி செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்டமாக இன்று தையல் பயிற்சி ஆசிரியையினால், முதற் கட்டமாக முப்பது(30) சக்தி மாதர் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தையல் வகை, நுட்பங்கள் , NVQ4 தரச்சான்றிதழின் பெறுமதி போன்ற முக்கியமான விடயங்கள் மற்றும் பயிற்சி விதிமுறைகள் என்பன விரிவான விளக்கங்களுடன் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட  கடன் வசதி  தொடர்பான முதலாவது மீளாய்வு குறித்த கலந்துரையாடலுக்காக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பில் இன்று (27) கூடியது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை அதிகாரிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று மாலை இலங்கை மத்திய வங்கியில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.  இந்த சந்திப்பில் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர்  Peter Breuer மற்றும் Katsiaryna Svirydzenka ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

இலங்கை அதிபர் சேவையின் தரம் III-இற்கான 4,718 வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஆட்சேர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான இடைக்கால தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடயத்துடன் தொடர்புடைய மேலும் சில மனுக்களை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று(27) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான வரி பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவு 12 வரை வாகன வருமான வரி பத்திரங்களுக்காக இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடு மத்திய மாகாணத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. Read more