Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் கூட்டம் இன்றுகாலை 9:30 மணியளவில் கட்சியின் துணைத்தலைவர் பொன்.செல்லத்துரை அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி) அவர்களின் இல்லத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

Read more

ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(01) காலை நாடு திரும்பினார். உலகளாவிய பேர்லின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயம் மெற்கொண்டிருந்தார். மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

சர்வதேச சிறுவர் தினம்-

Posted by plotenewseditor on 1 October 2023
Posted in செய்திகள் 

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறுவர்களே அனைத்தையும் விட பெறுமதி மிக்கவர்கள் எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது. சிறுவர்களுக்கு உரிய தேவைகள் மற்றும் அவர்களுக்கான விடயதானங்களை செயற்படுத்துவதும் கல்வி உரிமைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதும் கட்டாயமானதே. Read more