2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்திருந்தும் இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் ஒன்லைனில் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விண்ணப்பதாரர்களுக்கு இம்மாதம் 06 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஒன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 1911 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கோ, 011 2 784 208 அல்லது 011 2 784 537 அல்லது 011 2 786 616 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென திணைக்களம் மேலும் கூறியுள்ளது.