Posted by plotenewseditor on 9 October 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 9 October 2023
Posted in செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(09) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கிழக்கு அபிவிருத்தி மையம் ஆகியன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை பேரணியாகச் சென்று மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Posted by plotenewseditor on 9 October 2023
Posted in செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு செயற்பாடு திருகோணமலையில் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். Read more