Header image alt text

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (11) கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ற வகையில், வைத்தியர்களுக்கான சம்பளத்தை வழங்கும் நடைமுறையை தயாரித்தல், வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரித்தல், சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவற்றுள் அடங்குகின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இன்று (10) மாலை இலங்கைக்கு வருகை தந்தார்.  இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவரும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கு வருகை தந்தார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. Read more