ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசிய ஜனாதிபதி ஜொக்கோ விடோடோவை (Joko Widodo) சந்தித்துள்ளார். சீன விஜயத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் நடைபெறும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.