ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிஜீங் நகரில் இன்று (20)  முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று பீஜிங்கில் நடைபெற்றது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கான, இரு தரப்பினருக்கும் உகந்த இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீன நிதி அமைச்சர் இதன்போது உறுதியளித்திருந்தார்.