Posted by plotenewseditor on 23 October 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 23 October 2023
Posted in செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் இருநாடுகளும் கூட்டறிக்கையொன்றை வௌியிட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீன ஜனாதிபதி மற்றும் துணை பிரதமரைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன – இலங்கை பாரம்பரிய நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்த விஜயத்தின் போது பொதுவான புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 October 2023
Posted in செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவினால் சில அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு அமைய, கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக டொக்டர் ரமேஷ் பத்திரண, கைத்தொழில் அமைச்சராகவும் செயற்படவுள்ளார். Read more