ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவினால் சில அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் ​மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு அமைய, கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக டொக்டர் ரமேஷ் பத்திரண, கைத்தொழில் அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.

இதனிடையே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.