வடக்கு மாகாண முன்பள்ளிகளின் சண்டிலிப்பாய் கோட்ட கிளைச் சங்கத்தின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. இச் சங்கத்தின் இணைப்பாளர் திருமதி யோகேந்திரன் கேமநளனி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.
அதே போன்று சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ம.கணேசன் மற்றும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முன்பள்ளி மாணவர்களின் பாண்ட் வாத்தியங்களுடன் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந் நிகழ்வில் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.