Header image alt text

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு சக்திவாய்ந்த போர்க்கப்பல்  நங்கூரமிட்டுள்ளது. தென் கொரிய குடியரசுக்கு சொந்தமான Gwanggaeto The Great எனும் கப்பலே நாட்டிற்கு வருகை தந்துள்ளது. இந்த கப்பல் நேற்று (26) காலை இலங்கையை  வந்தடைந்தது. கப்பலில் 249 பணியாளர்கள் உள்ளனர். 135 மீட்டர் நீளமுள்ள Gwanggaeto The Great போர்க் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Kim Hyoung Churl செயற்படுகின்றார். Read more

தான் தெரிவு செய்த பிரதிநிதியிடமிருந்து ஒரு நற்சான்றுக் கையெழுத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஒரு சமூகம் வாழுதென்றால் அது திருமலை மாவட்ட தமிழர் சமூகமாகத்தான் இருக்க முடியும். அந்த மக்களின் நன்மை தீமைகளில் பங்கெடுக்க ஆளில்லை. நலன்களை சென்று பார்க்க ஆளில்லை. அவர்களுக்காக பேசவும் ஆளில்லை.
தமிழாலும் சைவத்தாலும் சிறப்புப் பெற்று தமிழர்களின் தாயகமாக திகழ்ந்த திருகோணமலை, பௌத்த சிங்கள மேலாதிக்கச் செயற்பாடுகளால் அவர்களின் கைகளில் இருந்து இன்று நழுவிச் சென்று விட்டது என்றே சொல்லலாம்.

Read more

Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்தில் புவிசார் அரசியல் பரபரப்பை  உருவாக்கியுள்ளது.  இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சீனாவின் மூன்று போர்க் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்பிராந்தியத்தில் நங்கூரமிட்டுள்ள ஆய்வுக் கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் இரண்டு தடவைகள் நீர்த்தரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர் செயற்பாட்டுக் குழு இந்த பேரணியை முன்னெடுத்தது. Read more