Header image alt text

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது காலாவதியான கடவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அல்லது அதனை தவறவிட்ட இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டுகளை விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை விடுத்துஇ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பிரவேசிப்பதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தி குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். Read more

குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் ஆயிரத்து 500 பேரை உடனடியாக பணிக்கு உள்ளீர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்கள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். Read more