Header image alt text

2014.10.29
பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன. மீரியபெத்தை மண்சரிவில் மரணித்த 37பேரின் உறவுகளின் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்குகொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கும் பணியில் கழகமும் பங்கெடுத்திருந்ததையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம்.

Read more

குடிபோதையில் வாகனம் செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை நோக்கி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓட்டிச் சென்ற கார், வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் உள்ள மிராஜ் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரையும் பஸ்ஸையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். Read more

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினமும், ஆசிரியர் தினமும் இன்று காலை மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் தலைவி சா.பிதாசினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகவும் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் ம.ராசலட்சுமி, முன்பள்ளிகளின் வலய இணைப்பாளர் செ.ஆனந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6′ மேற்கொள்ளும் ஆய்வுகளில் இன்று தமது ஆய்வுக் குழு இணையவுள்ளதாக நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகளில் தமது நிறுவனத்தின் நான்கு அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் இந்த ஆய்வுகளில் இரண்டு கடற்படை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more