கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியமும் குமரநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா இன்று திங்கட்கிழமை (30.10.2023) இரவு கைதடி குமரநகர் சனசமூக நிலைய நகுலன் கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செல்வரத்தினம் மயூரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கைதடி பிரதேசத்தில் வாழுகின்ற மூத்த பிரஜைகளும், சிறுவர்களும் விருந்தினர்களால் சிறப்பு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த முத்தமிழ் விழாவில் மாணவர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.