துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது சேவையில், துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 10 வருடங்களாக மாலைதீவின் ஊடாகவே கட்டுநாயக்கவிற்கான விமான சேவையை துருக்கி விமான சேவை நிறுவனம் முன்னெடுத்து வந்தது. துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து கட்டுநாயக்கவிற்கான நேரடி விமான பயணத்திற்கு சுமார் 08 மணித்தியாலங்கள் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவையின் ஊடாக, துருக்கியில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கும் என விமான நிலையங்கள், விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்ரசிறி தெரிவித்துள்ளார்.