தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன் சந்திர தெரிவித்தார். இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும். Read more