
Posted by plotenewseditor on 2 November 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 2 November 2023
Posted in செய்திகள்
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. வரி நெருக்கடி, பல்கலைக்கழகங்களுக்கான வளங்கள் குறைக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் சாருதத்த இலங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களின் அனைத்து கல்விசார், கல்விசாரா ஊழியர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 2 November 2023
Posted in செய்திகள்
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலை சென்றுள்ளார். இன்று காலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர். Read more