Header image alt text

பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட தோழர். முருகதாஸ் (மனோகரன் முருகதாஸ்) அவர்கள் இன்று (03.11.2023) அதிகாலை காலமானார் எனும் துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைவருக்கும் அறியத்தருகிறோம். இவர் ஆரம்ப காலங்களில் கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு, கழகத்தின் வளர்ச்சியிலும் கழகத்தின் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

Read more

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  அவசர மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அதன் செயலாளர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார். இதற்கமைய, இன்று நண்பகல் 12 மணியுடன் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. Read more

03.11.1988 மாலைதீவில் மரணித்த தோழர்கள் வசந்தி (மணிவண்ணன் – வடலியடைப்பு) , ஜுலி (இளவாலை), அப்பி (பெரியகஞ்சுக்குளம்) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

மட்டக்களப்பு கொத்தியாவளையை பிறப்படமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் விநாயகமூர்த்தி (மூர்த்தி) அவர்களின் அன்புத் தாயாருமான கந்தையா நல்லம்மா அவர்கள் 02/11/2023 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

Read more

நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு சென்ற இந்திய மத்திய நிதியமைச்சர், அங்கு இடம்பெற்ற புத்தாக்க கண்காட்சியை பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து யாழ். பொதுநூலகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். Read more