மலர்வு : 1967.08.31 உதிர்வு : 2023.11.04
குருநாகல் கேலியகொட வெலிகலயைச் சேர்ந்த கணிதலாகே விஜயரட்ண அவர்கள் இன்று (04.11.2023) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். எமது கட்சித் தலைவரின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர், நம்பிக்கைக்குரியவராகவும் கடமைவீரராகவும் இருந்தார்.

இவர் கழகத் தோழர்கள் அனைவருடனும் நெருங்கிப் பழகிவந்ததோடு தனது கடமைகளுக்கு அப்பாலும் ஒரு சக தோழனைப்போலவே இருந்தாரென்பதை என்றுமே மறக்க முடியாது.
அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
04.11.2023.
தொடர்புகட்கு : 0743398494