வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் வசிக்கும் பெ.மாயன்பெருமாள் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கழகத்தின் சுவிஸ் தோழர் சிவா (செல்லத்துரை சிவானந்தசோதி) அவர்களின் நிதியுதவியில் 30,000/- பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இன்று (05.11.2023) வழங்கிவைக்கப்பட்டது.
கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இடம்பெற்ற இவ் உதவி வழங்கும் நிகழ்வில்
கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மத்தியகுழு உறுப்பினர் சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), நிர்வாகப் பொறுப்பாளர் பற்றிக், கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவியை வழங்கிவைத்தனர்.