தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, அவர் பதவி நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் மற்றும் பிரதம அதிகாரி உள்ளிட்ட தரப்பினர், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி, அண்மையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் நீக்கப்பட்டு, புதிய தலைவராக வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய விஜித் குணசேகர, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முக்கியமான தகவல்கள் அடங்கிய பல ஆவணங்களை அழித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தின. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.