யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றையதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் இ.நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் அபிராமி இராசதுரை, பாடசாலையின் பழைய மாணவியும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் விடுதி முகாமையாளருமான அருள்நந்தினி ஜொபின்சன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பரிசளிப்பு விழாவில் கற்றல் மறனறும் விளையாட்டு செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களும், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும், மற்றும் மாகாணமட்ட, தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் சிறப்புப் பரிசில்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இப்பரிசளிப்பு விழாவில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.